இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய மாணவி தங்கம் வென்று சாதனை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 –

இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் நடைபெற்ற 10-ஆவது இந்திய சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த 14 வயது மாணவி லாஷ்ரீய்னா பாலசந்திரன் (Laashreeyna), கராத்தே குமிட்டே (Karate Kumite) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா
விவேகானந்தா, தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை பயின்ற லாஷ்ரீய்னா, தற்போது Saint International School-இல் இடைநிலைக் கல்வி பயின்று வருகிறார்.

முதல் முறையாக வெளிநாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்ற லாஷ்ரீய்னா, மிகுந்த தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் விளையாடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு வயதில் தி கராத்தே கிட் (The Karate Kid) திரைப்படத்தை பார்த்ததன் மூலம் அவருக்கு கராத்தே மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, YellowLab Fitness, Hayashi Ha அமைப்பில் இணைந்து கராத்தே பயிற்சியைத் தொடங்கினார்.

கடுமையான பயிற்சி, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட அவர், தற்போது சர்வதேச அரங்கில் தங்கப் பதக்கம் வென்று தனது கனவை நனவாக்கியுள்ளார்.

இளம் வயதிலேயே சர்வதேச போட்டியில் தங்கம் வென்றுள்ள லாஷ்ரீய்னாவின் இந்த வெற்றி, ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதற்கிடையில், தங்கப் பதக்கத்துடன் இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7 மணியளவில் லாஷ்ரீய்னா தனது குழுவினருடன் நாடு திரும்பினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற மாணவி லாஷ்ரீய்னாவிற்கு தினத்தந்தி குழுமத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles