
சித்தியவான்,ஆக04: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு ஆகஸ்டு 16ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் சிவாலெனின் தெரிவித்த வேளையில் பரிசுகளை வெல்லப் போவது யாரு என்னும் எதிர்பார்ப்பும் கவிஞர்களிடையே எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சங்கத்தின் புரவலரும் தமிழ்நெஞ்சருமான வழக்கறிஞர் தமிழ்த்திரு ம.மதியழகனின் ஆதரவோடு 2வது ஆண்டாக நடைபெறும் இக்கவிதைப் போட்டியின் பரிசளிப்புன்விழா சித்தியவான் டிண்டிங்ஸ் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி கவிஞராகவும் நவீன சிந்தனை ஆளுமையாகவும் வலம் வந்த கவிஞர் கோமு எனப்படும் கோ.முனியாண்டியின் நினைவாக இப்புதுக்கவிதைப் போடடி 2வது ஆண்டாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நிலையிலான இப்போட்டிக்கு நாடு தழுவிய நிலையில் நிலையிலிருந்து பெரும் ஆதரவு கிடைத்தை நினைவுக்கூர்ந்த சிவாலெனின் இம்முறை 80க்கும் மேற்பட்ட கவிதைகள் கிடைக்கப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,கடந்தாண்டும் இவ்வாண்டும் பரிக்குரிய கவிதைகளோடு தேர்வு செய்யப்பட்ட மேலும் சில கவிதைகளையும் தொகுப்பு நூலாகவும் உருவாக்கும் இலக்கையும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கவிதைப் போட்டி வெற்றியாளர்கள் முதல் பரிசாக வெ.1500, 2வது பரிசாக வெ.1000 மற்றும் 3வது பரிசாக வெ.750ஐ தட்டிச் செல்லும் அதே வேளையில் 4 முதல் 10 வரையிலான வெற்றியாளர்கள் வெ.100 ஐ ஆறுதல் பரிசாகவும் பெறுவர்.
வெற்றியாளர்களுக்கு அவர்களின் தனிப்புலனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளது.
அதே வேளையில், போட்டியில் பங்கெடுத்தவர்கள் பரிசளிப்பு நாளில் கலந்து கொண்டு பங்கேற்பாளர் சான்றிதழையும் நிகழ்ச்சியன்று பெற்றும் கொள்ளலாம் என்றும் சிவாலெனின் தெரிவித்தார்.

