செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் HSM FC கிளப் சாம்பியன்!

செமினி, ஆக 3-
தேசிய ஐபிஎப் இளைஞர் பிரிவு மற்றும் உலுலங்காட் ஐபிஎப் இளைஞர் அணி ஏற்பாட்டில் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன் கிண்ண ஒன்பதின்மர் கிண்ண கால்பந்து போட்டி நேற்று செமினி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

லீக் பாணியில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றது.

இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் HSM FC கிளப் 4-3 என்ற பெனால்டி கிக்கில் யாசோ எப்சி கிளப்பை வீழ்த்தி டத்தோ எம் சம்பந்தன் கிண்ணத்தையும் 2,500 வெள்ளி ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த யோசே எப்சி கிளப்புக்கு 1,500 வெள்ளி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில்
கெமெந்தா கிளப் 4 ஆவது இடத்தையும்
கணபதி எப்சி 3 ஆவது இடத்தையும் பிடித்தது.

போட்டியை காண சிறப்பு வருகை தந்த ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன், துணை தலைவர்
டத்தோ வேலாயுதம் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் தீனா,
டயானா கேட்டர்ஸ் உரிமையாளர் சாமி, தொழில் அதிபர்
டத்தோ வனத்தையா, ஐபிஎப் தலைமை செயலாளர்
மோகன் மற்றும் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஐபிஎப் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் அவர்கள் இந்த போட்டியை மிகவும் விமரிசையாக நடத்தி முடித்தார்.

பூச்சோங்கை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சுகன், அர்வின் ஆகியோர் போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கினர். இவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles