சர்வதேச அரங்கில் சாதனை படைத்த சிலம்பம் கோர்வை!

சர்வதேச சிலம்பம் சம்மேளனம் ஏற்பாடு செய்து, பினாங்கு மாநில சிலம்ப கழகம் மற்றும் பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் 2026, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை யுஎஸ்எம் (USM), பினாங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, கனடா, மியான்மார், புரூணை, சவுதி அரேபியா, பெல்ஜியம், கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 355 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சிலம்பம் கோர்வையைச் சேர்ந்த 16 வீரர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி 16 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

இந்த மாபெரும் வெற்றிக்கு சிலம்பம் கோர்வையின் தோற்றுனர் மற்றும் தலைவர் மாஸ்டர் கலைமாமணி டாக்டர் கு. அன்பழகன், மாஸ்டர் ரவி, மாஸ்டர் அன்பரசன், மற்றும் மாஸ்டர் குணாளன் ஆகியோரின் அர்ப்பணிப்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, அனைத்து பயிற்சிகளையும் மதித்து உறுதுணையாக இருந்த பெற்றோர்களின் ஆதரவும், மாணவர்களின் கடின உழைப்பும் இந்த வெற்றிக்கு வலுசேர்த்தது.

இந்த வெற்றி சிலம்பம் கோர்வைக்கு மட்டுமல்ல; மலேசியாவிற்கும் தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்திற்கும் சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனையாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles