கல்வி அனைவருக்கும் சமம்! பாகுபாடு காட்டப்படாது! கல்வி அமைச்சர் உறுதி

செ.வே.முத்தமிழ் மன்னன்

பூச்சோங், மே 3-
இந்நாட்டில் அனைத்து இன மாணவர்களுக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதால் அதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் உறுதி அளித்தார்.

அனைத்து மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

இதுவே மடானி அரசாங்கத்தின் இலக்கு. மேலும் இது
கல்வியமைச்சின் முதன்மை இலக்காக உள்ளது.

தமிழ்ப்பள்ளிகள் அதில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டில் மடானி அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

மடானி அரசாங்கத்தின் இம்முயற்சிகள் தொடரும். இது எனது உத்தரவாதம் என்று கல்வியமைச்சர் பாட்லினா சீடேக் கூறினார்.

இன்று பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப் பள்ளியில்
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தம் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பாட்லினா சீடேக் தெரிவித்தார்.

குறிப்பாக மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாணவர்களும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் நோக்கம் மிகவும் பாராட்டுகிறது.

இதன் அடிப்படையில் தான் இன்றைய விழாவில் கலந்து கொண்டேன் என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles