அமெரிக்காவுக்கான மலேசிய தூதராக தாம் நியமிக்கப்படபோவதில்லை: முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் 

அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக தாம் நியமிக்கப்படபோவதில்லை என்றும் அதற்கு உரிய தரப்பினர் புதிய மலேசியத் தூதரை நியமிப்பார்கள் என்றும் முதலீடு, வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் கூறினார் 

மலேசியத் தூதராக இருந்த நஸ்ரி அப்துல் அஸிஸின் பதவிக்காலம் பிப்ரவரி 8ஆம் தேதியோடு நிறைவு பெற்றுவிட்டது 

இதனால் புதியவரை நியமிக்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் குறித்த வேட்பாளர் மாமன்னரின் இணக்கத்திற்குப் பிறகு அறிவிக்கப்படுவார் என்று கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

தெங்கு ஸப்ருல் அஸிஸ் பெயரை அடுத்து பிகேஆர் உதவி தலைவர் நூருல் இசா அன்வார், முன்னாள் சி ஐ எம்.பி தலைமை செயல்முறை அதிகாரி நசிர் ரசாக்  ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles