
புதிய பள்ளி அமர்வில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக துணை கல்வியமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இந்த ஆண்டு மொத்தம் 461,198 புதிய முதலாம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு முதலாம் ஆண்டில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 447,082 ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து, பாலர் பள்ளியில் இவ்வாண்டு 205,051 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 460,494 மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் முதலாம் படிவத்தில் இணைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 17 புதிய பள்ளிகள் செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

