சிலாங்கூர் இந்திய உயர்கல்வி மாணவர்கள் கல்வி நிதிக்கு மார்ச் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், மார்ச் 1- குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டும் வழங்கவிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம்
2,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த கல்விக் கட்டணம் ஒரு மாணவருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அந்த உதவித் தொகை இம்முறை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக வழங்கப்படும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டில் பட்டப்படிப்பையும் முதலாம் ஆண்டில் டிப்ளோமா படிப்பையும் மேற்கொள்ளும் மாணவர்கள் இத்திட்டம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்தாண்டுகளுக்கும் மேல் இம்மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்ப பாரங்களை ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அலுவலகத்திலும்
excoofficepapparaidu@gmail.com / என்ற மின்னஞ்சல் அல்லது https://ls.selangor.my/Cefq3l என்ற அகப்பக்கம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்யலாம் தொலைபேசி எண்: 03-55447307

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles