துணை தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன்! உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வேன் – டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

ஷா ஆலம்,மார்ச் 1
கெஅடிலான் கட்சி உயர்மட்ட தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியை எதிர்த்து போட்டியிட மாட்டேன்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுவேன் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அறிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் தேர்தல் இப்போது கலை கட்டிருக்கும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதில் துணை தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போட்டியிட விரும்புபவர்கள் போட்டியிடலாம். ஆனால் எல்லையை மீறக் கூடாது.

சிலாங்கூர் மாநிலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு 100 விழுக்காடு ஆதரவை வழங்குகிறது.

நம் கட்சியின் வலிமையை வலுப்படுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு அழைப்பு டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி பக்கபலமாக இருக்கிறார்.

ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை மென்மேலும் வலுப்படுத்துவோம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று ஷா ஆலமில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தொகுதி, இளைஞர் மற்றும் மகளிர் அணி மாநாட்டில் உரையை போது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் மகளிர் அணி தலைவி பாட்லினா சீடேக் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles