உலகம் போற்றும் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக கிடைத்திருக்கும் தருணத்தில் 2023 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற மலேசியர்கள்!!!

2022 ஆம் ஆண்டுக்கு நேற்றிரவோடு விடை கொடுத்து மலேசியர்கள் இன்று 2023 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

உலகம் போற்றும் ஒரு மாபெரும் உன்னத தலைவராக விளக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய திருநாட்டிற்கு பிரதமராக பதவி ஏற்க மாட்டாரா என்று ஏங்கி தவித்த மலேசியர்களுக்கு இப்போது அவரே பிரதமராக கிடைத்திருக்கிறார்.

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாடு 2023 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்று உள்ளது.

இன்று மலேசியாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு பூசைகளும் நடைபெற்றன.

குறிப்பாக கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார் பட்டர், சிவ ஸ்ரீ சிவானந்தா பட்டர் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு பூசைகளை நடத்தினர்.

பத்துமலை முருகன் திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பினாங்கு தண்ணீர் மலை கோவில் உட்பட அனைத்து கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles