கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணம் மீட்கப்படும்! ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் துடைத்தொழிக்கப்படுவார்கள்

கடந்த காலத்தில் தலைவர்கள் குவித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான வெள்ளி பணம் மீட்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு புத்தாண்டு வாழத்துச் செய்தியில் சூளூரைத்தார்.

இவர்களுடன் எந்த ஒரு சமரசமும் செய்துக் கொள்ள மாட்டோம்.

இவர்கள் குவித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான வெள்ளி மீட்கப்படும்.

அதேசமயம் இன்னமும் ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் துடைத் தொழிக்கப்படுவார்கள் என்று அவர் சூளூரைத்தார்.

நாட்டின் 10ஆவது பிரதமராக பதவி ஏற்றது முதல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல சீர்திருத்தங்களை செய்து வரும் வேளையில் நாட்டின் பொருளாதாரமும் சீரடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles