
இந்தியச் சமூகத்தின் எதிர்காலம் கல்வியை நம்பி இருப்பதால் தொடர்ந்து அத்துறை பாதுகாக்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில டத்தோ ஸ்ரீ அமிரூடின் சாரி தெரிவித்தார்.
2008 முதல் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கவனமாகவும் விரிவாகவும் மேம்படுத்தி வருகிறது.
“நாங்கள் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களில், கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சோங் காராங்கில் உள்ள ஒரு தோட்ட நிலப் பிரச்சினையையும் மற்றும் பத்து கேவ்ஸ் இந்திய குடியேற்ற கிராமம் பிரச்சனையும் வெற்றிகரமாகத் தீர்த்ததுள்ளோம்.
“அதேபோல் கல்வித்துறைக்கு 60 லட்சம் வெள்ளி இருந்து 80 லட்சமாக ஒதுக்கீடு செய்துள்ளோம்,
இதில் 50 லட்சம் தமிழ் தேசிய வகை பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

