

சுங்கை பட்டாணி, ஆக 18-
நேற்று காலை 8.00 மணிக்கு, எந்தவொரு தொழில்நுட்ப சிக்கலும் இல்லாமல் 24 மணி நேரம் நடைபெற்ற எங்கள் AIMST நேரடி அமர்வை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் என்று ம இகா விளையாட்டு பிரிவு தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்..
தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் என அனைத்து தளங்களிலும் 24 மணி நேர அமர்வில் மொத்தம் 110,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்தோம்.
சந்தைப்படுத்தல் மற்றும் ODL பிரிவு தலைமையிலான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய இந்த நிகழ்வில் மொத்தம் 97 ஊழியர்கள் , மாணவர்கள், பேச்சாளர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை 9.00 மணிக்கு, மலேசிய சாதனை புத்தகத்தின் (MBR) அதிகாரிகள் நிறைவு விழாவின் போது எங்கள் மூத்த நிர்வாகக் குழுவை பாராட்டி சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்ததால் நினைவுப் பலகையை வழங்கினர் என்று அவர் சொன்னார்.

