மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழில் வாயிலாக வருமானத்தை ஈட்டலாம்.

பத்துகாஜா, ஆக.18: இந்த மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழிலை ஒவ்வொரு மகளிரும் கற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த கைத்தொழிலை நன்கு கற்றுத்தேர்ந்து அதன் வாயிலாக அவர்கள் தொழில்முனைவராக செயல்படுவதற்கும், ஊதியம் பெறுவதற்கும் பேருதவியாக அமையும் என்று இங்கு டேசா செங்காட்( இந்தியன் செட்டல்மண்) மண்டபத்தில் நடைபெற்ற மருதாணி பயிற்சி பட்டறை நிகழ்வை நிறைவு செய்த போது இவ்வாறு கூறினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.

இன்றைய காலகட்டத்தில் திருவிழா நிகழ்வு மற்றும் இதர பெருநாள் காலங்களில் இந்த மருதாணி இடும் ஒப்பனைக்கு இந்திய மகளிர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆகையால், இந்த மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழிலை கற்றுத்தேர்ந்து அதன் பின் தங்களின் கைத்தொழிலாக தீவிரமாக முற்பட்டு செய்தால் தங்களின் வருமானத்தை அவர்கள் பெருக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இன்று இங்கு காலை முதல் மாலை வரை வரிசான் இந்தியா மலேசியா இயக்கத்தின் ஏற்பாட்டில் 30 மகளிர்கள் கலந்துக்கொண்டனர். இந்த குறுகிய காலகட்டத்தில் பலர் தங்கள் திறமைகளை அழகாக மருதாணி இட்டு தங்களிடமிருந்த திறமையை வெளிப்படுத்தினர். காலப்போக்கில் இவர்கள் அனைவரும் நன்கு கற்றுத்தேர்ந்து தங்களுடைய கைத்தொழிலாக உருமாற்றம் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.

பல மகளிர்கள் இத்தொழிலை தங்கள் கணவருக்கு உதவும் வகையில் குடும்ப வருமானத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த தொழிலாகும். குறிப்பாக, வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் இல்லத்திற்கு அல்லது அவர்களின் நிகழ்வில் பலருக்கு மருதாணி இடும் ஒப்பனையை செய்யலாம். இல்லையேல் தொழில்முனைவராக சிறுதொழில் அடிப்படையில் கடை வீதிகளிலும் அல்லது கடைகளில் ஒரு பகுதியில் தங்களின் மருதாணி தொழிலை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பயிற்சியாளர்களின் படைப்புகளை நேரடியாக வ.சிவகுமார் கண்டுகளித்தார். அத்துடன், இப்பயிற்சி பட்டறையில் கலந்துக்கொண்ட அனைத்து மகளிர்களுக்கும் சான்றிதழை வழங்கினார். பயிற்சியாளர் அனிசாவிற்கு நினைவுச்சின்னமும் பழக்கூடையும் வழங்கப்பட்டது. டேசா செங்காட் ஜே.கே.கே. இந்நிகழ்விற்கு வற்றாத ஆதரவு வழங்கி சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles