
கோலாலம்பூர் அக் 10-
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நிலவரப்படி பூமிபுத்ரா மக்களுக்கான உத்தரவாத 2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
இது 2023, 2024 நிலவரப்படி 12.3 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தது.
அதே வேளையில் இந்தியர்களுக்கான உத்தரவாதம் 0.2 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.9 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
மேலும் மித்ரா, தெக்குன், அமானா இக்தியார் ஆகியவற்றின் கீழ் சமூ, பொருளாதார திட்டங்களிலிருந்து இந்தியர்களும் பயனடைகிறார்கள்
இத்திட்டங்களுக்காக மொத்தம் 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.