புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு தீர்வு!

ஷா ஆலம் , அக் 28-
இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.

முன்னாள் ஆலயமும் புதிய ஆலயத்தின் பிரதிநிதிகளும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் YB Ng Suee Lim அவர்களின் அலுவலகத்தில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிரந்தர தீர்வு காணப்பட்டது.

மூனிஸ்வரர் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அத்துடன், பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு ஆலயத்தை மாற்றும் முழு செலவையும் ஏற்க சம்பந்தப்பட்ட தரப்புகள் சம்மதித்துள்ளனர்.

நேற்று சிலைகளை பாதுகாப்பாக மாற்றும் பணியும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த முயற்சியை இணக்கத்துடனும், சமாதானத்துடனும் நிறைவேற்ற உதவிய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஹியான் ஹான், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர் யோகேஸ்வரி, KKI Bukit kemuning
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles