இன்னிசை கலை இரவு கலை நிகழ்ச்சியின் மூலம் உடல் பேருக்குறைவுள்ள 19 பேருக்கு நிதி உதவி.

சுங்கைபட்டாணி, அக்28-
உடல் பேருக்குறைந்தவர்களுக்கு உதவதற்காக ஒவ்வொரு வருடமும் கலை நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்டப்பட்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சுங்கைபட்டாணி வட்டாரத்தைச் சேர்ந்த “வேகம் மியுசிகன் புரோக்‌ஷன்”தலைவர் எஸ்.பி.மோகன்.
கடந்த நான்கு வருடமாக தொடர்ந்து இந்த உதவியினை செய்து வரும் அவர் இம்முறை இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட ஏறத்தாழ 10ஆயிரம் ம.ரிங்கிட்டை 19 உடல் பேருக்குறைந்தவர்களுக்கு பகிர்ந்து அளித்தார் மோகன்.


அவருக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர் டாக்டர் சின்னையா நாயுடு-டாக்டர் ஜோபினா தம்பதிகள் பெருந்தொண்டு புரிந்தனர்.அவர்களோடு பினாங்கு மாநிலத்தைச் சேர்த டத்தோ மரியதாஸ் தம்பதிகளும் இந்த நிகழ்விற்கு தங்களது உதவியினை மறவாமல் வழங்கினர்.இந்த மனித நேயப்பணியால் இந்த நிகழ்வு ஒரு சமூகவியல் விழிப்புணர்வாக மாறியது.

கம்பார் வண்ணமலர் இசைக்குழுவினர் இசையில் சிங்கப்பூர் மற்றும் நாட்டின் பிரபல கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து தங்களது படைப்புகளை வழங்கினர்.அஸ்ட்ரோ புகழ் லிங்கேஸ் தனது அறிவிப்பின் மூலம் நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்.

மின் தெக் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வு அதன் மேடை அலங்காரம் பரமிக்க வகையில் அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles