
சொக்சோ மற்றும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி MYFutureJobs பிப்ரவரி 25,26, ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் Perak Batu Gajah Silver Lake Village Outlet மண்டபத்தில் நடைபெறுகிறது என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
காலை 9.00- மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உங்களின் வேலை வாய்ப்புகளுக்காக MYFutureJobs 2023 இல் காத்திருக்கின்றன!
கால தாமதமின்றி உடனே நாடுங்கள்.
www.myfuturejobs.gov.my/careerfair அகப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

