
வேலூர் மாவட்டம் 3231
2023 – 2024 தலைவர் பதவிக்கு தேர்வான
வேலூர் அக்காடு ரோட்டரி சங்கத் தலைவர் Rtn PHF அப்துல் , வேலூர் அச்சுவர்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் P.பால் கிங்ஸ்டன், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் D.இளங்கோ,
வேலூர் அக்காடு ரோட்டரி சங்கத்தை சேர்ந்த செயலாளர் S.ஷரிப் ஆகியோர்
மலேசியா ஸ்ரீ சாரதா தேவி இல்லம் ஆதரவற்ற அன்பு குழந்தைகளை சந்தித்து 3231 ரோட்டரி சங்கத்தின் சார்பாக 800 வெள்ளி அல்லது தமிழக மதிப்பில் ரூபாய் 18000த்தை அவர்களுக்கு உதவியாய் வழங்கப்பட்டது.
இந்த சாரதா தேவி இல்லத்தின் நிலவரம் குறித்து 3231 ரோட்டரி சங்கத்தினர் கேட்டறிந்தனர். இந்த இல்லத்திற்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவிகள் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் 3231 ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சாரதா தேவி இல்லத்தின் நிறுவனர் Dr A.குமரன் மற்றும் மலேசியா தேசம் ஊடக குழும நிறுவனர் குணாளன் மணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

