
பினாங்கு துறைமுகத்தில் பழு இறக்கும் தொழிலாளிகளுக்கு அடிப்படை மாத ஊதியமான 1500 ரிங்கிட் வழங்கப்படாமல், துறைமுகத்தின் குத்தகை நிறுவனங்கள் தொடர்ந்து அலைகழித்து வருவது குறித்து மனிதவள அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி.
அடிப்படை ஊதியம் 1500 என்று சட்டம் இயற்றிய பிறகும், தொழிலாளர்களுக்கு அந்த ஊதியத்தை வழங்காமல் இருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அவர்களும் பல ஆண்டுகளாக அடிப்படை ஊதியம் வரும், வரும் என காத்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது என சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் தலையீட்டினால இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாக சத்தீஸ் தெரிவித்தார். பினாங்கு துறைமுக பழு இறக்கும் தொழிலாளிகள் தன்னிடம் வழங்கிய கோரிக்கை மனுவை அமைச்சரிடம் நேரடியாக கையளித்து, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தீஸ் முனியாண்டி வலியுறுத்தினார்.
சத்தீஸ் முனியாண்டியிடம் மனுவை பெற்றுக்கொண்ட மனிதவள அமைச்சர், தமது அதிகாரிகளுக்கு இது குறித்து உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார்.

