உலகக் கிண்ணப் போட்டி! இங்கிலாந்து – கானா ஆட்டம் டிரா

வாஷிங்டன் ஜூன் 24-
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் மோதின. நடப்பு உலகக் கோப்பை தொடரின் குருப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு அணிகள் இடையிலான ஆட்டம் போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கின. ஆட்டத்தின் முதல் பாதி வரை இதற்கான முயற்சி நீண்டது. எனினும், இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவிலலை.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் கோல் கணக்கு துவங்காமலேயே முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் மீதி பாதி நேரத்தில் எந்த அணி கோல் கணக்கை தொடங்கும், இறுதியில் வெற்றி பெறும் அணி எது என்ற பரபரப்புடன் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின்

இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி மட்டுமே செய்த நிலையில், ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் L பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், கானா அணி இரண்டாவது இடத்திலம் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles