
கோத்தா டமன்சார, ஜூலை 20-
புரோட்டோன் வாகன விற்பனை நிலையம் இன்று ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை பகல்வேளையில் புதிதாக தொடக்கம் கண்டது.
புரோத்தோன் குடும்பத்தின் அனைத்து ரக வாகனங்களும் விற்பனை செய்யப்படும் ஓரிட விற்பனை மையமாக Cahaya Automotif Sdn Bhd வடிவமைக்கப்பட்டு நேற்று இந்நிறுவனத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.

கோத்தா டாமண்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் இஸுவான் பின் அகமட் காசிம், புரோத்தோன் பொதுத் தொடர்பு இயக்குனர் திருமதி சுலாவாத்தி முகமட் யூசுஃப் உள்ளிட்டோர் இந்த வாகன விற்பனை மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, 47810 கோத்தா டாமன் சாரா, 27 Jalan PJU 5/20E THE STRAND என்னும் இடத்தில் இந்த புரோத்தோன் குழும விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

