
கோலாலம்பூர்: ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைத் தாக்கிப் பேசினால் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பதவி விலக வேண்டியதிருக்கும் என்று பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும்போது, தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி ஒற்றுமை அரசாங்கக் கூட்டாளிகளைத் தாக்கினால், அமைச்சர்கள், துணையமைச்சர்கள், அரசு நிறுவனப் பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டியதிருக்கும்.
துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோரைத் தொடர்பு கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

