
ரவாங், ஜூலை 19-
ரவாங் வட்டார மக்களுக்கு தாய்க் கோவிலாக விளங்கும் வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலபிஷேக பூசை நடைபெற்று வருகிறது.
இன்று ஜூலை 19 ஆம் தேதி Selangor SUK, பந்திங் சட்டமன்றம் சார்பில் பூசை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
Selangor SUK இதில் பங்கு கொண்ட வேளையில் பாப்பா ராயுடு சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி காந்திமதி, ஐசிட் அதிகாரி மாதவன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ராஜேஷ் ராவ் மற்றும் பாப்பா ராயுடு குடும்பத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மற்றும் மண்டலபிஷேகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற ஆதரவு தரும் அனைத்து தரப்பினருக்கும் ஆலய தலைவர் டத்தோஸ்ரீ பாலா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவுக்கும் நன்றியை பதிவு செய்து கொண்டார்.

