
சிரம்பான்: ஜூலை 20
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலையான அரசை அமைக்க 23 இடங்களைக் கைப்பற்ற பக்கத்தான் ஹராப்பான் இலக்கு கொண்டுள்ளது என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒரு பெரிய மக்கள் ஆணையைப் பெற்று நிலையான மாநில அரசை அமைப்பதற்காக, 36 இடங்களில் குறைந்தது 23 இடங்களையாவது வெல்ல வேண்டும்.
இதையே பக்கத்தான் ஹராப்பான் இலக்காக நிர்ணயித்துள்ளது.
கூட்டணிக்கு தற்போது 17 மாநில சட்டமன்ற இடங்கள் இருப்பதாகவும், எளிய பெரும்பான்மையைப் பெற குறைந்தது 19 இடங்கள் தேவை.
இருப்பினும், ஒரு நிலையான நிர்வாகத்தை உறுதி செய்ய ஒரு பெரிய மக்கள் ஆணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
19 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், எதுவும் நடக்கலாம்.
எனவே, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நம்பிக்கை கூட்டணி குறைந்தது 23 இடங்களையாவது வெல்ல வேண்டும் என நாம் இலக்கு கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

