பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தை போலீஸ் இன்னும் விசாரிக்கிறது

ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 – கடந்த மாத இறுதியில் ஹுலு சிலாங்கூர் பள்ளியொன்றின் ஆசிரியை ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இன்னும் விசாரிக்கப்படுகிறது.

அழுத்தம் உட்பட அனைத்துக் கோணங்களிலும் அச்சம்பவத்தைப் போலீஸ் விசாரித்து வருவதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்தார்.

தற்போதைக்கு அந்த சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைக்கு குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ அதிகாரிகள், சகப் பணியாளர்கள் ஆகியோரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

எனினும் , விசாரணை இன்னும் முழுமைப் பெறவில்லை என்றாரவர்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில், ஹுலு சிலாங்கூர் பள்ளியொன்றில் ஆசிரியை ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், குவாலா குபு பாரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles