மித்ரா தேவிக்கு சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கியது சிலாங்கூர் MBI அறக்கட்டளை

ஷா ஆலாம், ஆகஸ்ட் 20— மோரிப்பில் உள்ள தாமான் பஹாகியாவைச் சேர்ந்த மித்ரா தேவிக்கு சிலாங்கூர் எம்பிஐ அறக்கட்டளை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மூலம் தினசரி அவரைப் பராமரித்து வரும் பெற்றோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்த உதவியை தஞ்சோங் செப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா அக்குடும்பத்தை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்த சக்கர நாற்காலி மித்ரா தேவிக்குக் கூடுதல் வசதியை வழங்குவதுடன், அவரது பெற்றோர் அன்றாட வாழ்க்கையில் அவரை கவனித்துக்கொள்வதையும் எளிதாக்கும் என போர்ஹான் நம்பிக்கை தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles