மலேசியா மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க சுதந்திரமான ஆய்வு உதவும்: கடல்சார் துறை நிபுணர்!

சுங்கவரி ஏய்ப்பை எளிதாக்கும் பொருட்டு, குறிப்பாக சீனா தொடர்பான சரக்கு மாற்று நடவடிக்கைகள் குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க, மலேசியா ஒரு சுதந்திரமான ஆய்வைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலேசியா வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் நகர்வு மற்றும் தோற்றம் குறித்த கேள்விகளுக்கு, உண்மை நிலவரங்களின் அடிப்படையிலான ஒரு ஆய்வு பதிலளிக்க உதவும் என்று கடல்சார் துறை நிபுணர் டத்தோஶ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.

மலேசியா தனது நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு உண்மைகளிலிருந்து தொடங்க வேண்டும்.

கண்மூடித்தனமான மறுப்பு நமது நற்பெயரைப் பாதுகாக்காது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

சட்டவிரோத சரக்குமாற்றத்தின் அதிகரித்த அபாயத்துடன் தொடர்புடைய அடுக்கு 2 (Tier 2) நாடாக மலேசியா வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

மாபெரும் சரக்குமாற்ற மோசடி: எழுச்சி, வீச்சு மற்றும் செலவுகள் என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, மலேசியா உற்பத்தியின் ஒரு ‘நுண்மையமாகவும்’ (microhub) மற்றும் ஒரு கடல்வழி நுழைவாயிலாகவும் மாறியுள்ளது.

இருப்பினும், வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, சீனாவிலிருந்து அமெரிக்காவின் இறக்குமதி ஆதாரங்கள் மாறியதை, பாதிக்கப்பட்ட அனைத்து சீன வர்த்தகமும் சட்டவிரோதமாக சரக்குமாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொண்டது.

சர்வதேச வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் (Miti) முன்னாள் பொதுச்செயலாளர் ரெபேக்கா பாத்திமா ஸ்டா மரியா, இந்த விவகாரத்தில் மலேசியா மீது அமெரிக்கா நியாயமற்ற முறையில் முத்திரை குத்தியுள்ளதாக ‘தி எட்ஜ்’ பத்திரிக்கைக்குத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த டத்தோஶ்ரீ ஜெயேந்திரன்,

சரக்கு விவரப் பட்டியல்கள், சரக்குச் சீட்டுகள், சுங்க ஆவணங்கள், மூலச் சான்றிதழ்கள், சேமிப்புப் பதிவுகள், ஏதேனும் கலத்தல் அல்லது செயலாக்கம் உட்பட, சரக்குகளின் முழுமையான நகர்வையும் இந்த ஆய்வு கண்டறிய வேண்டும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles