செப்டம்பர் 12 ஆம் தேதி மாபெரும் அளவில் நித்திரைக் கதைகள் புத்தக வெளியீட்டு விழா! துணை அமைச்சர் யூனிஸ்வரன் அறிவிப்பு

புத்ரா ஜெயா, செப்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தமிழ் சமுதாயத்தின் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரைக் கதைகள் புத்தகம் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர் தேசிய நூலகம் ஆடிட்டோரியத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளும்படி ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆதரவில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நித்திரைக் கதைகள் புத்தகத்தில் மொத்தம் 61 கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு புத்தகத்தில் ஆறு கதைகள் என்ற வீதத்தில் 10 புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நித்திரைக் கதைகள் நூல் வெளியீட்டு விழாவின் முக்கிய நோக்கம் சிறுவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தமிழ் மொழி – இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் பற்றையும் அதிகரிப்பதாகும் என்று அவர் சொன்னார்.

இதன் மூலம் புதிய தலைமுறையினர் வாசிக்கும் பழக்கத்தில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துவார்கள் என்றார் அவர்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வை வெற்றி பெற செய்ய ஆதரவு வழங்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக 017-6834685, 012-3113343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூட்டரசு பிரதேச தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பார்த்தீபன் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles