

கோலாலம்பூர் அக் 21-
கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி 17 ஆம் ஆண்டு பிரதமருடன் தீபாவளி கொண்டாட்டம் கலை விழா விமரிசையாக நடைபெறுகிறது என்று சங்கத்தின் தலைவர் வேலாண்டி தெரிவித்தார்
இம்முறை இந்த விழாவுக்கு கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ சிறப்பு வருகை புரிகிறார்.
இரவு 8 00 மணிக்கு மேல் அமைச்சர் ஹன்னா இயோ வருகையை அமைச்சு உறுதி செய்துள்ளது.
ஆட்டம் பாட்டம் இன்னிசை விழாவுடன் இந்த விழா நடைபெறுகிறது
சுமார் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
எங்கள் அழைப்பை ஏற்று அமைச்சர் ஹன்னா இயோ வருகை புரிவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இரவு 8 30 மணிக்கு மேல் ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தில் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா, அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் ஆகியோரும் சிறப்பு வருகை புரிகிறார்கள்.
கடந்த காலங்களை போல் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்படும்
மேலும் வசதி குறைந்த தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நீதி உதவி வழங்கப்படும்
என் தலைமையிலான நிர்வாக குழுவினர் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக செயலாளர் இராஜன், பொருளாளர் லோகநாதன் ,துணை தலைவர் நாராயணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அரும்பாடு பட்டு இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
அன்புள்ள மாறன் மேற்பார்வையில் மண்ணின் மைந்தர்களின் இன்னிசை விழா இரவு 8 00 மணி முதல் இரவு 12.00 மணி வரை நடைபெறும்
இந்த விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய கோலாம்பூர் மாநகர் மன்றம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

