பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் விஜயதசமி விழா கோலாகலம்!டத்தோ டாக்டர் விஸ்வா, டத்தின் புனிதா தலைமையில் சிறப்புப் பூஜை; 300 பேருக்கு அன்னதானம்!

கோலாலம்பூர், அக் 26-

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விஜயதசமி விழா, இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, ஆலயத்தில் ஒரு வார காலமாக சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் உற்சவர் சிலை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், கிருஷ்ணர் ஆலயத்திற்கு வெளியே எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த விழா டத்தோ டாக்டர் விஸ்வா மற்றும் டத்தின் புனிதா ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை இருவரும் முன்னின்று கவனித்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விஜயதசமி விழா, இந்த ஆண்டு பக்தர்களின் சிறப்பான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles