மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு30,000 வெள்ளி மானியம்!அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், நவ 2-
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் செய்திகளாக வழங்கி வரும் பத்திரிகையாளர்களின் நலனை எப்பொழுதும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

அந்த வகையில் தாம் அமைச்சராக இருக்கும் டிஜிட்டல் அமைச்சின் வழி மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக பலத்த கரகொலிக்கு மத்தியில் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

எனக்கு பத்திரிகையாளர்களை மிகவும் பிடிக்கும். மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் எனது நீண்ட கால நண்பர்.

மறைந்த என் தந்தை கர்ப்பால் சிங் சில வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துவர். ஏனெனில் சட்டத்தில் நிறைய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் என் தந்தையை சந்திக்க வருவார்கள்.

அதனால் பத்திரிகையாளர்கள் எங்கள் குடும்பத்துடன் நீண்ட கால நட்பினை கொண்டிருக்கின்றனர் என்றார்.

பத்திரிகையாளர்கள் என்பதனை தாண்டி நாம் அனைவரும் நண்பர்கள். நமக்குள் சிறு சிறு வேற்றுமை இருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதனை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். சில நேரங்களில் ஆட்சி மாறும். ஆட்சியாளர்கள் மாறுவார்கள். ஆனால் நாம் யாருக்கு வாக்களித்தால் நாடும் சமுதாயமும் செழித்தோங்கும் என்பதனையும் ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நேற்று பத்து கேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வுக்கு உற்சாக வரவேற்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles