தீபாவளியை முன்னிட்டு 1,000 இந்தியர்களுக்கு தலா RM200 உதவி! – டத்தோ ஃபர்ஹான் ஃபௌசி

குவாந்தான், நவ 3-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்திரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 1,000 இந்தியர்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன்கள் வழங்கப்பட்டதாக டத்தோ ஃபர்ஹான் ஃபௌசி தெரிவித்தார்.

குவாந்தான் புக்கிட் உபியில் உள்ள டென் டென் பேரங்காடியில் நடைபெற்ற ‘சஹாயா தீபாவளி மடானி’ நிகழ்ச்சியில், B40 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 1,000 பேர் பயனடைந்தனர். மொத்தம் 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

வசதி குறைந்த குடும்பங்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று டத்தோ ஃபர்ஹான் ஃபௌசி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரனும் கலந்துகொண்டார்.

மேலும், தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் டத்தோ ஃபர்ஹான் ஃபௌசி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles