36 ஆண்டுகளாகத் தொடரும் நலப்பணி; தீபாவளியை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உதவிகள்!

பட்டர்வொர்த், நவ. 3–

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பினாங்கு மாநிலத் தொடர்புக்குழு ஏற்பாட்டில் தீபாவளிக் கொண்டாட்டமும் அறப்பணி விருந்தும் பட்டர்வொர்த் சரவணாஸ் உணவக வளாகத்தில் நடைபெற்றன.

மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரனும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வேணி தனேந்திரனும் விருந்தினர்களை வரவேற்று உபசரித்தனர்.

36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த நலப்பணியின் ஒரு பகுதியாக, வசதி குறைந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகளும் ரொக்க உதவியும் வழங்கப்பட்டன. ராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சேர்ந்த சிறார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் சக்தி கட்சியின் மத்திய, பினாங்கு மாநிலத் தலைவர்கள், பாகான் தொகுதி மசீச தலைவர் டாக்டர் டான் மற்றும் அவரது செயற்குழுவினர், ராமகிருஷ்ண ஆசிரமத் தலைவர் ராமசாமி, வடக்கு செபராங் பிறை மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“தலைமைத்துவம் என்பது பதவி மட்டுமல்ல; மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையுமாகும். உதவி தேவைப்படும் நேரங்களில் மட்டுமின்றி, எப்போதும் மக்களுடன் இணைந்திருக்க வேண்டும்” என்று தனேந்திரன் தெரிவித்தார்.

நலப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், நிகழ்வைச் சிறப்பாக நடத்த உதவிய நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் சரவணாஸ் உணவகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles