பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்துக் கட்டண உதவி

ஷா ஆலாம், அக். 29: உலு சிலாங்கூரில் உள்ள லாடாங் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, இவ்வாண்டு சுமார் RM21,000 மதிப்பிலான பள்ளிப் பேருந்துக் கட்டண உதவி வழங்கப்பட்டது.

பெற்றோரின் போக்குவரத்துச் செலவுச் சுமையைக் குறைத்து, நிதி நெருக்கடியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதே இந்த உதவியின் நோக்கமாகும் என கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் கூறினார்.

மேலும், உதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தொடர்ந்து ஆதரவளித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு B40 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், சிலாங்கூர் அரசு பள்ளிப் பேருந்துக் கட்டண மானியத் திட்டத்திற்காக RM1.035 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 3,452 மாணவர்கள் பயனடைகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு RM300 உதவித்தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles