கோத்தா கெமுனிங் தொகுதியில் 750 பேருக்கு தீபாவளி ஜோம் ஷாப்பிங் வவுச்சர்

ஷா ஆலம், நல 3-
கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 750 பேர், தீபாவளி ஜோம் ஷாப்பிங் திட்டத்தின் உதவியைப் பெற்றனர்.

அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தகுதியானர்களுக்கு ஜோம் ஷோப்பிங் தீபாவளி பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.

முந்தைய ஆண்டு இத்தொகுதியைச் சேர்ந்த 500 பேர் இந்த உதவியைப் பெற்ற வேளையில் இவ்வாண்டு, 250 பேர் அதிகரித்து, மொத்தம் 750 பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளதாக எஸ் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த உதவி, தீபாவளிப் பண்டிகைக்கான செலவுகளைக் குறைத்து, தேவையுள்ள குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனுடன், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களும் இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாரவர்.

சமூக நலனை முன்னிறுத்தி நடைபெறும் சமூகச் சந்திப்பு மற்றும் இல்லம் தேடிச் செல்லும் ‘Ziarah Komuniti’ திட்டத்தின் மூலமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

விரைவில், வசதி குறைந்த குடும்பங்களுக்கான PEKAWIS சமூக நல உதவித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் இவ்வாண்டு சுமார் 1,000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் சுமையைக் குறைத்து, தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளித்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாட கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்யுமென , எஸ். பிரகாஷ் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles