தீபாவளி ‘ஜோம் ஷாப்பிங்’ வவுச்சர்: செந்தோசா தொகுதியில் 750 குடும்பங்களின் சுமை குறைந்தது

கிள்ளான், நவ 3: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் வகையில், செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 750 குடியிருப்பாளர்களுக்குத் தீபாவளி ‘ஜோம் ஷாப்பிங்’ வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

மாநில அரசின் இந்த உதவியின் மூலம் தகுதியான குடும்பங்கள் தங்களின் தீபாவளி முன்னேற்பாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.

இந்த வவுச்சர்களைப் பெறுவதற்காக மொத்தம் 1,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இருப்பினும் அந்தத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 750 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த உதவிக்கு தகுதியான அனைவரும் தீபாவளிப் பண்டிகைக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக என்எஸ்கே (NSK) வளாகத்தில் தங்களின் வவுச்சர்களைப் பெற்றுக் கொண்டனர்.

பண்டிகைக் காலங்களில் குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்க உதவும் சிலாங்கூர் மாநில அரசின் இந்த முயற்சி மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகும் என்று குறிப்பிட்ட குணராஜ் ஜார்ஜ், மக்களின் நலனில் அக்கறை காட்டும் மாநில அரசுக்கும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles