
மலாக்கா, நவ 3-
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வரும் 26 வயதான பக்காத்தான் ஹராப்பானின் இளம் வேட்பாளர் ஃபர்சானா ஹயானியின் திறமைகள் கிளேபாங் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அன்பாக நானா என்று அழைக்கப்படும் கிளேபாங் சட்டமன்றத் தொகுதியின் இந்த இளம் வேட்பாளர், ஒரு தலைவருக்குரிய ஆளுமையை கொண்டிருப்பதுடன், மெண்டரின் மொழியில் பேசும் தனது திறமையால் பல்லின மக்களின் மனதையும் வெல்ல முடிகிறது.
நான் புக்கிட் ரம்பாயின் பூர்வீக குடிமகள். என் மறைந்த தாத்தா
மாட் பாப் என்று அனைவருக்கும் தெரியும், என் தந்தை நாசிர் புக்கிட் ரம்பாயில் பிரபலமான உணவகம் மற்றும் ரொட்டி சானாய் கடை நடத்தி வந்தார்
நான் சின் சாய், புக்கிட் ரம்பாய் சீன பள்ளியில் படித்தேன், பின்னர் மலாக்கா சீன உயர்நிலைப் பள்ளியில் படித்தேன், SPM தேர்வில் மெண்டரின் மொழியை ஒரு பாடமாக எடுத்தேன் என அவர் ஃபர்சானா கூறினார்.
நானா சீன சமூகத்துடன் மிகவும் நெருக்கமானவர், மலாய் மற்றும் இந்திய சமூகங்களுடனும் அதே உணர்வுடன் பழகுவார்
மெண்டரின் மொழியில் பேசவும், எழுதவும், பாடவும் கூட அவருக்கு தெரியும்.
களத்தில் இறங்கி மெண்டரின் மொழியில் உள்ளூர் மக்களுடன் உரையாடும்போது, சீன சமூகத்தின் வரவேற்பு மிகவும் சாதகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளன.
UiTM ஷா ஆலம் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், அப்பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு இன மக்களை அணுகுவதில் உறுதியாக உள்ளார்.
இவர் தங்கா பத்து AMK இளைஞர் பிரிவின் தலைவரும் ஆவார்.
வெள்ளப் பிரச்சினை, மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன், சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் போன்ற இன்னும் தீர்வு காணப்பட வேண்டிய உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி கிளேபாங் மக்களுக்கு தொடர்ந்து உதவுவேன்.”
கிளேபாங் வாக்காளர்கள் தனக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும், நவம்பர் 14-ல் வாக்களிக்க வர வேண்டும் என்றும் ஃபர்சானா கேட்டுக்கொண்டார்.

