எஸ்பிஎம் ,எஸ்டிபிஎம் சிறப்பு தேர்ச்சி & சுக்மா போட்டிகளில் பதக்கம் வென்ற வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!

2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மற்றும் 2026ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு உலுங்காட் நாடாளுமன்றம் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது.


செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அண்மைய சுக்மா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 21 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் உலுங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சா நற்சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்.


கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிப்பது அவர்கள் இத்துறைகளில் தொடர்ந்து சாதனைகள் படைக்க ஊக்கமளிக்கும் என்றார் சானி.


செமினி மற்றும் டுசுன் துவா வட்டார மக்கள் குறிப்பாக இந்தியர்களின் மேம்பாட்டிற்காக உலு லங்காட் நாடாளுமன்றம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமி குறிப்பிட்டார்.


இவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் இவ்வாண்டு சுக்மா விளையாட்டு போட்டிகளில் வெள்ளி, தங்கப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை சிறப்பிக்கும் இந்த நிகழ்ச்சியாகும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.


இந்தப் பாராட்டு விழா மித்ரா வழங்கிய நிதி வாயிலாக நடத்தப்பட்டதாகவும் இதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ஆகியோருக்குத் தாம் நன்றி கூறிக் கொள்வதாகவும் ராஜன் விவரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles