


கோலாலம்பூர் நவ 14-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு மடானி அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்றது..
தேசிய ஒருமைப் பாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக தொழில் சம்மேளனம் இந்த விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சரியாக காலை 11.30 மணிக்கு இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், துணையமைச்சர் யுனேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் அனைத்து இன பண்டிகைகள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெறும் மடானி அரசின் தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நான் அனைத்து இனங்களுக்கும் பிரதமர் என்று குறிப்பிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருளை நீக்கி நன்மைகள் கொண்டு வரும் தீபத்திருநாள் தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்றார்

