மனிதவள அமைச்சு – சொக்சோ – பேராக் அரசு ஏற்பாட்டில் பகான் டத்தோவில் மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி!

மனிதவள அமைச்சு – சொக்சோ – பேராக் அரசு ஏற்பாட்டில்
பகான் டத்தோவில் மாபெரும்
வேலை வாய்ப்பு கண்காட்சி!

புத்ரா ஜெயா, மே 26-
சொக்சோ, மனித வள அமைச்சு மற்றும் பேராக் மாநில அரசு ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி MYFuture Jobs மே 27-28 ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் Dewan Serbaguna Dato ‘ Haji Abdullah Ahmad Hutan Melintang, Bagan Datuk மண்டபத்தில் நடைபெறுகிறது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிகின்றனர்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை மே 28 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

காலை 9.00- மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது

நூற்றுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் பல நிறுவனங்கள் உங்களின் வேலை வாய்ப்புகளுக்காக MYFutureJobs 2023 இல் காத்திருக்கின்றன!

கால தாமதமின்றி உடனே நாடுங்கள். www.myfuturejobs.gov.my/careerfair அகப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles