இளம் வீராங்கனை ஷெரின் வெல்லாபோய்க்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது! மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

புத்ரா ஜெயா மே 26-
நடந்து முடிந்த கம்போடியா சீ விளையாட்டு போட்டியில் 400 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற பேராவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷெரின் வெல்லாபோய்க்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதத்தில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் பதக்கம் வெல்ல போராட வேண்டும்.

இன்னும் சற்று கடினமாக பயிற்சியை மேற்கொண்டால் இவரால் பல போட்டிகளில் சாதனை படைக்க முடியும் என்று அவர் சொன்னார்.

அமெரிக்காவில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று இவர் புதிய தேசிய சாதனை படைத்திருக்கிறார்.

இவரின் தந்தை சம்சன் வெல்லபோய் மற்றும் தாயார் மேரி ஜோசப்பின் ஆகியோர் நாட்டிற்காக தங்கப்பதங்கங்களை பெற்று தந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் எதிர்காலத்தில் ஆசியாவில் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக இவரால் உருவெடுக்க முடியும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறினார்.

அமெரிக்காவில் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ள
ஷெரின் வெல்லாபோய்க்கு
நான்கு லட்சம் வெள்ளியை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ வழங்கி உற்சாகப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles