


கோலாலம்பூர் மே 25-
வரும் சனிக்கிழமை 27 ஆம் தேதி Putrajaya International Convension Centre மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு தேசிய பயிற்சி வாரம் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மலேசியாவில் தேசிய பயிற்சி வாரம் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மனிதவள அமைச்சின் கீழ் இயக்கும் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாட்டில் தேசிய பயிற்சி வாரம்
மே 22அம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உயர் கல்வியமைச்சு, மாநில அரசுகள், அரசாங்க இலாகாக்கள், தனியார் நிறுவங்கள், பயிற்சி மையங்கள் உட்பட தனிநபர் ஆதரவில் தேசிய பயிற்சி வாரம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்று இன்று நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ IR டாக்டர் ஜைனி ஊஜாங் மற்றும் HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஹமிட் ஆகியோர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பயிற்சி வாரத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பயிற்சி திட்டங்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
5,000 பயிற்சியாளர்களை கொண்ட இப் பயிற்சி திட்டங்கள் வாயிலாக 125,000 பேர் பயன் பெறவுள்ளனர்.
5 லட்சம் மணி நேரத்திற்கான பயிற்சிகள் முறையாக நேர்த்தியாக இந்த வாரத்தில் பங்கேற்பாளர்கள் பெறவுள்ளனர்.
மலேசியர்கள் அனைத்து துறைகளிலும் திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் பயிற்சிகள் சென்றடைய வேண்டும்.
குறிப்பாக திவேட் எனப்படும் தொழில் திறன் பயிற்சிகளின் வாயிலாக மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் மனிதவள அமைச்சு இந்த தேசிய பயிற்சி வாரத்தை அறிமுகம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பயிற்சி திட்டங்கள் அனைத்தும் 250 மில்லியன் வெள்ளி மதிப்புடையது.
இந்த இலவச பயிற்சி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெறும் தேசிய பயிற்சி வாரம் நிகழ்வில் கண்காட்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

