
கம்போடிய சீ விளையாடுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற Sheren Samson Vallabooy தொடர்ந்து அமெரிக்காவில் பயிற்சியை மேற்கொள்ள இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ 4 லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
ஷெரின் வெல்லாபோய் அமெரிக்காவில் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம்வரை இந்த நிதியை பெறுவார் என இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார்.
அமெரிக்காவில் பயிற்சியை பெறும்போது அங்கு தங்கியிருப்பதற்கான செலவு, பயிற்சிக்கான செலவு , உணவு அலவன்ஸ், தெராபி சிகிச்சை, போட்டிக்கான கட்டணம் உட்பட ஷேரினின் பல்வேறு செலவுகளுக்கும் அந்த ரொக்கத் தொகை உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது Hannah Yeoh இந்த இனிப்பான செய்தியை தெரிவித்தார்.
சீ போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற 19 வயதுடைய இளம் ஓட்டப்பந்தய வீரரான Umar Osman னுக்கு தேவைப்படும் உதவி குறித்து அவருடன் தேசிய விளையாட்டு மன்றம் பேச்சு நடத்தும் என Hannah Yeoh தெரிவித்தார்.

