பினாங்கில் நடைபெறும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 7,000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்

பினாங்கு, ஜுன் –
ஜூன் 3-4ஆம் தேதிகளில் பினாங்கில் நடைபெறும் பெர்கேசோவின் MyFutureJobs வேலை வாய்ப்பு கண்காட்சி விழாவில் 7,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பள்ளி படிப்பை முடித்தவர்கள், புதிய பட்டதாரிகள் மற்றும் பேறு குறைந்தவர்கள் உட்பட வேலை தேடுபவர்கள், தொழில் முன்னேற்றம் தேடும் தொழில் வல்லுநர்கள், கண்காட்சியின் போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த 56 முதலாளிகள் நடத்தும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தும் ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாள் வேலை வாய்ப்பு பினாங்கு பட்டர்வொர்த் அரங்கில் ஜூன் 3,4 ஆம் தேதிகளில் நடைபெறும்.

பெர்கேசோவின் MyFutureJobs தொழில் கண்காட்சியில் பங்குபெறும் துறைகளில் உற்பத்தி, வங்கி மற்றும் நிதி, காப்பீடு, போக்குவரத்து, தளவாடங்கள் ஆகியவை பினாங்கில் உள்ள 90 சதவீத நிறுவனங்களைக் கொண்டுள்ளன.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் ஜுன் 4ஆம் தேதி காலை 10.00 மணிக்கு வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles