


பினாங்கு ஜூன் 4-
மின்சாரம்,மின்னியல் , சேவை துறை ஆகியவற்றுக்கு பினாங்கு மாநிலம் மிகவும் பிரபலமானது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா. நிச்சயமாக பல வேலை வாய்ப்புகள் பினாங்கு மாநிலத்தில் உள்ளன
மனித வள அமைச்சு (KSM) கீழ் இயங்கும்
SOCSO மூலம் வேலை வாய்ப்பு கண்காட்சியை பினாங்கு மாநிலத்தில் நடத்துவதை பெருமையாக கொள்கிறோம்.
வேலை தேடும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி விளங்குகிறது.
மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி அடைய வேண்டிய நேரம் இது.
My future Jobs போர்டல் நிலவரப்படி 2023 ஏப்ரல் வரை 58,717 பணியிடங்கள் காலியாக இருந்த வேளையில் இவை பினாங்கு மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக பினாங்கு பட்டர் வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் 56 தொழில் துறைகள் பங்கேற்று 7,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இந்த விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

