

பினாங்கு ஜூன் 4-
நாட்டில் வேலையின்மை விகிதம் குறைப்பு இலக்கை அடைய மற்றும்
வாழ்வாதாரத்தின் மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அதிகமான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள முதலாளிகள் முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகளவில் அந்நிய தொழிலாளர்களை சார்ந்திருக்க வேண்டாம்.
ஆகவே அதிக அளவில் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள முன் வர வேண்டும்
முதலாளிகளை அழைக்கிறேன் என்றார் அவர்.
பினாங்கு பட்டர்வொர்த்தில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள மனிதவள அமைச்சுடன் முதலாளிகள்
ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடினமாக உழைக்க உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகள் முன் வர வேண்டும்.
மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தொழில் திட்டம் மூலம் முதல் 1,800 வெள்ளி ஊக்கத்தொகையை வழங்க முதலாளிகள் முன் வருவது பாராட்டுக்குரியது.
ஊனமுற்றோர், ஏழைகள், பெண்கள், பரோலில் வெளியே வந்த நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளிகள், வேலையற்ற TVET பட்டதாரிகள் அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

