

பினாங்கு, ஜூன் 4-
பி-40 மற்றும் ஏழை இல்லத்தரசிகள் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கு பெறுவதற்கு
தனியார் நிறுவனங்கள் நிதியுதவி செய்ய முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று கேட்டுக் கொண்டார்.
ஆண்டுக்கு 120 ரிங்கிட் பங்களிப்புடன் இல்லத்தரசி
55 மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்கள் SKSSR எனப்படும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காப்பீடு பெறுவார்கள்.
இவர்கள் பாதுகாப்பு நலன்கள் போன்ற பல பலன்களை பெறுவார்கள்.
அதிகளவில் இல்லத்தரசிகள் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்க அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புகளை
மனிதவள அமைச்சு வரவேற்கிறது.
இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (Skim Keselamatan Sosial Suri Rumah) கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது என்றார் அவர்.
அனைத்து இல்லத்தரசிகளையும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
மேலும் இல்லத்தரசிகள் சொக்சோ சமூக நல பாதுகாப்பை பெற தங்கள் மனைவிகளின் சார்பாக கணவன்மார்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில் பினாங்கு பட்டர் வொர்த்தில் வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Bagan நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், செனட்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

