
கோலாலம்பூர் ஜூன் 29-
நான், சரவணா @ பால், மலேசியத் தமிழர் ஒற்றுமைக் குடும்பம் நலச் சங்கம் (Tamizhar Otrumai Kudumbam) சார்பில், கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆலோசனை வாரிய உறுப்பினராக தியாகராஜ் சங்கரன் அவர்கள் நியமிக்கப்பட்டதற்காக மடானி அரசாங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நியமனத்தை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். தலைநகரில் வாழும் இந்திய சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, இனம், மதம் பாராமல் கோலாலம்பூர் மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றுவார் என்று நம்புகிறோம்.
இந்த முக்கியமான பொறுப்பிற்காக தியாகராஜ் சங்கரன் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையையும் பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றி, மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் தொடர்ந்து சேவை செய்ய இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறோம்.
இந்த நியமனத்தின் மூலம் தகுதியான ஒருவருக்கு வாய்ப்பளித்த மடானி அரசாங்கத்திற்கு மீண்டும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
சரவணா @ பால்
மலேசியத் தமிழர் ஒற்றுமைக் குடும்பம் நலச் சங்கம்
(Tamizhar Otrumai Kudumbam)

