

மலேசிய திருநாட்டில் தாய்க்கோவிலாக விளங்கி கொண்டிருக்கும் கோலாலம்பூர் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் நடைபெறும் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில்
ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உலக திருத்தலங்களில் ஒரு புகழ்பெற்ற கோவிலாக விளங்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவ ஸ்ரீ சிவக்குமார் குருக்கள் தலைமையிலான குருக்கள் ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

